Sunday, July 8, 2012

Kadhal Thozhvi Kavithaigal

Kathal Tholvi Kavithaigal  :


காற்றில் விதை தூவி
வெந்நீர் தனை ஊற்றி
பஞ்சு வேலியிட்டு
நெஞ்சில் உரமிட்டு
பார்த்து வளர்க்காது
உயிர் சேர்த்து வளர்த்த பயிராம் - காதல்
இதில் மன்னவரும் மகுடமிழக்க
விண்ணவரும் வீண் பகை சுமக்க
பின்னவராய் நாம் மட்டும் என்ன விதி விலக்கோ ?
மனக்காதல் மணக்காததால்
மணக்காது போகும் பெண்ணை
கண்கள் இமைக்காமல் கண்ட
நிலைக்காதல் நினைக்காது நீக்கிடுமோ ?
நெஞ்சு பொறுக்குதில்லையே
நம் உயிரென நினைந்தவள் உதறிடும்போது....
புற்றரவு தீண்டிடினும்
கொடும் நஞ்சு சுவைத்திடினும்
மனம் பெற்றிடுமோ உற்ற உன்னை இழந்த வலி ?
இறக்கும் வரை இவ்வலியை இழி மரணமும் கொணர்வதுண்டோ?
இறந்தாயினும் ஓர் வழியில் இரு மனமும் புணர்வதுண்டோ?
என்னை இறத்து உன்னை மறக்க
உன் நினைவை மண் புதைக்க
கோழை போல் இறக்கமாட்டேன்...
கொண்ட உயிர் துறக்கமாட்டேன்...

0 comments:

Post a Comment