Wednesday, August 22, 2012

Brothers Marriage Kavithai

தம்பிக்குத் திருமண வாழ்த்து :-

டன் பிறந்த மூன்று பேரோடு
நான்காவதாய் சேர்ந்தவனே;
நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து
பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே;
ன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு
உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே;
உண்மை நிலைக்கு அஞ்சி -
சத்தியம் போற்றும் சீலனே;
காலம் கடக்க கடக்க
அதன் மீதேறி நின்று தங்கைகளுக்காய் உழைத்தவனே,
தாய் சொல் காத்து,  தந்தை வழிநடந்து; ஊர்சொல்லும் மதித்து -
தீஞ்சொல்லுக்கு பயம் கொள்ளும் பண்பிற்குரியோனே;
ழைப்பின் உச்சத்தை ஒரு இசைபோல்
உடனிருப்பவருக்கும் உரைப்பவனே;
உன் பதைபதைக்கும் பேச்சுக்குள்  -
பிறர்நலம் பேணும் உணர்வுகளைக் கொண்டவனே;
ன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்;
உன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்; என் பல
வெற்றிக்கென  – உன்னொரு கையும் கிடைக்க
என் வெற்றிகளுக்கும் காரணமாய்; எண்ணத்தால் இருப்பவனே;
புன்னகையில் பூத்து  நிற்போனே; அன்பினால் எமை
அர்ச்சித்தவனே; அக்கரையில் தாய்போல் சிறந்தவனே;
என்னன்பு தம்பியே…….., எம் உடன்பிறப்பே….
நீ வாழி..
நீடு வாழி..
ன் குலம் சிறக்க வாழி..
ன் பெயர் நிலைக்க  வாழி..
ன் நலமும், வீட்டார் நலமும், உனை சேர்ந்தோர் நலமும்
குன்றாது வளம்பெற வாழி..
ல்லெண்ணங்கள் ஈடேற
ற்செல்வங்கள் பதினாறும் பெற்று
ந்தவள் பூரிப்பில் –
ரும் சந்ததி செழிக்க
பார்போற்ற; ஊர் போற்ற; எல்லாம் சிறக்க
ற்பெயரோடும் பல புகழோடும் நீடூழி வாழி!!

0 comments:

Post a Comment