Monday, December 31, 2012

இலட்சியப் பெண்





மக்பூன் றியாப்

இலட்சியப் பெண்ணாய் திகழ்ந்திட
ஆசை கொண்டாள் என் தங்கை
ஐரோப்ப மோகத்தை
தன் மனதில் கொண்டு
இந்திய அழகிகளை தன்
கண்களில் கண்டு
உயிரோட்ட மார்க்கத்தில் - உயிரற்று
மாறிட்டால்
உனக்காய் பல பெண்கள்
வழிகளாய் வாழ்ந்தனரே..
எம் ரஸூலவரின் நுபுவத்தையேற்று
தன்னுடைமைகளை இறைவழியில்
அளித்தவரும் பெண் தான்..
நபிமொழியை மனம் ஏற்று
அதிகமாய் அறிவித்த அறிவின்வூற்றும்
ஒரு பெண் தான்..


உரிமைக்காய் நடந்த போர்களிலும்
வீரத்துக்காய் நடந்த போர்களிலும்
இஸ்லாத்தின் வாரிசை ஈன்றெடுத்து
வீரத்தாய்ப்பால் தனை ஊட்டி – வீரனாய்
அனுப்பி வைத்த பெறுமையைக்
கொண்டவலும் இலட்சியப் பெண் தான்..
அன்றைய தியாகம்..
அன்றைய உணர்வு..
அண்மையில் கண்டோம் இந்நூற்றாண்டின்
எம் இலட்சியப் பெண்களிலே..
காஸாவின் அடுப்புக்கள்
எரியாத வேலையிலும் - ஏவுகனை தயாரித்து
போராட பங்கு கொண்டால்..
தன் கற்பையும் தன் சொந்த பூமியையும்
இஸ்ரேல் வெறி நாயிடம் காக்க
பசியும் பட்டினியும் சூழ்கொண்ட வேளையிலும்
தூய தீனுக்காய் - தன் மகனை
போராட அனுப்பி வைத்தாள்.
பலஸ்தீனை படித்தவர்கள் புரிந்திடுவர்
அவ்விலட்சியப் பெண்ணின் வாழ்க்கை தனை..

எகிப்திலும் நாம் கண்ட
படிப்பினைகள் மறக்கலையே..
திருக்கலிமா நிலைபெறவே
சிறைவாசம் அனுபவித்த
ஆயிரம் ஸைனபுகள் அங்குண்டு..
கொடுங்கோலன் நாசரினை நிலைகுலைய
செய்ததிலும் - பொரம் போக்கன்
முபாரக்கினை ஆட்சி கவிழ்த்ததிலும்
சரிபங்கு அவர்க்குண்டு
அவள் தான் எகிப்தின்
இலட்சியப் பெண்..
படிக்கையிலே நீரும் அவள்
வாழ்க்கை அறிந்திடுவீர்..

எம் பெண் கற்புக்காய் காஷ்மீரில்
அலையும் நாய்களை நாள்தோறும்
எதிர்த்து மானம் காக்கும்
ஓர் பிஞ்சிப் பெண்ணும் இலட்சியப் பெண்தான்..
ஈராக்கின் ஆக்கிரமிப்பில்
தன் மானம் காக்க போராடி
மடிந்தவளும் இலட்சியப் பெண்தான்..
ஆப்கானில் மதம் தலைக்கேறிய
காடயரிடம் மாட்டி தன் வாழ்வை
தொலைத்தவளும் கூட்டுப்படையின்
கூட்டு வல்லுறவால் - நிலைகுலைந்து
இரத்தப் பழி எடுத்த
வீர மங்கையரும்
இலட்சியப் பெண்தான்..

வீதியிலே பெண் சென்றிட
பயந்திடும் வேலையில்
இஸ்லாமிய அடையாளத்தில்
பட்டப் பின் படிப்பை
வெளிநாட்டில் கற்று வந்த எம்
இஸ்லாமிய சகோதரியும்
இலட்சியமானவள் தான்..
இபாதத்துடன் நின்று வீண் தர்க்கம்
புரியாமல்..
அல்லாஹ்வின் மார்க்கம்
உலகாள செய்திட வேண்டி
நல்லதொரு குடும்பத்தை
இத்தீனுக்காய் அமைத்திட
மனதில் உறுதி கொண்ட எல்லா
சகோதரியும்
ஓர் இலட்சியப் பெண்தான்..


0 comments:

Post a Comment